ஆட்சி மாற்றம் நடந்ததும் எல்லா சினிமா சங்கங்களின் தலைவர்களும் பட் பட்டென்று ராஜினாமா கடிதம் கொடுத்து வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், என்று பரபரப்பாகிக் கிடக்கிறது சங்கங்கள். இதற்கிடையில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.
அடிக்கடி கருணாநிதியை பார்க்கிறேன். இப்போது புதிய முதல்வரிடம் சென்று உதவிகள் கேட்பது கூச்சமாக இருப்பதால் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன். இப்போது அந்த ராஜினாமாவை சங்கத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்கவில்லையாம்.
தொடர்ந்து அவரே பணியாற்ற வேண்டும் என்று அவசர பொதுக்குழு கூடி தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்த மாற்றம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரபரப்பில் ரஜினி விவகாரம்
ரஜினியின் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடும் என்று பேச்சிருந்தாலும், அதற்கு அவசியம் இல்லை என்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
இதற்கிடையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ரஜினியின் கார் சென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தது. கால்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டாராம் அவர். மூச்சு திணறலும் இருந்தது. இதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு பல்வேறு சிகிச்சைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை மிக ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறது மருத்துவமனை. காரணம் ரஜினி ரசிகர்கள் அங்கே திரண்டு வந்து நின்றால் என்னாவது என்ற அச்சத்தினால்தானாம். இது குறித்து போன் செய்யும் நிருபர்களிடம் கூட இங்கு ரஜினி சார் இல்லையே.
அவர் வீட்டுக்கு போயிட்டாரே என்றே பதில் சொல்கிறார்கள். ரஜினியே தனக்கு ஒன்றுமில்லை என்று பேட்டி கொடுக்கிற வரைக்கும் பரபரப்பு ஓயாது போலிருக்கிறது
0 comments:
Post a Comment