Recentposts
Popular Posts
-
This summary is not available. Please click here to view the post.
-
TV Anchor Jahnavi is very popular . She was doing anchor in Gemini T...
-
Shradha Sharma Very Hot Bollywood Sexy Item Garam Beauty.She always in very hot Mood when she perform in Stage.In that Video She expose he...
-
None expected, indeed the actor himself. Saravanan Sivakumar completing his graduation at Loyola College never knew that he would make it ...
-
Indian Chechi Hot Aunty Madhu Sharma also an actress Sari deep Navel Pictures. You will love her navel sari wearing photos. Madhu Shar...
Blog Archive
- 02/24 - 03/03 (2)
- 07/22 - 07/29 (2)
- 06/24 - 07/01 (4)
- 05/06 - 05/13 (9)
- 04/29 - 05/06 (8)
- 04/01 - 04/08 (4)
- 03/25 - 04/01 (8)
- 02/26 - 03/04 (7)
- 02/19 - 02/26 (1)
- 02/12 - 02/19 (2)
- 02/05 - 02/12 (5)
- 01/22 - 01/29 (5)
- 01/08 - 01/15 (2)
- 01/01 - 01/08 (28)
- 12/25 - 01/01 (27)
- 12/18 - 12/25 (9)
- 12/11 - 12/18 (76)
- 12/04 - 12/11 (33)
- 11/27 - 12/04 (58)
- 11/20 - 11/27 (35)
- 11/13 - 11/20 (48)
- 11/06 - 11/13 (36)
- 10/30 - 11/06 (23)
- 10/23 - 10/30 (83)
- 10/16 - 10/23 (48)
- 10/09 - 10/16 (84)
- 10/02 - 10/09 (118)
- 09/25 - 10/02 (73)
- 09/18 - 09/25 (89)
- 09/11 - 09/18 (124)
- 09/04 - 09/11 (75)
- 08/28 - 09/04 (84)
- 08/21 - 08/28 (30)
- 08/14 - 08/21 (68)
- 08/07 - 08/14 (77)
- 07/31 - 08/07 (83)
- 07/24 - 07/31 (94)
- 07/17 - 07/24 (169)
- 07/10 - 07/17 (168)
- 07/03 - 07/10 (164)
- 06/26 - 07/03 (118)
- 06/19 - 06/26 (252)
- 06/12 - 06/19 (208)
- 06/05 - 06/12 (252)
- 05/29 - 06/05 (288)
- 05/22 - 05/29 (251)
- 05/15 - 05/22 (272)
- 05/08 - 05/15 (123)
- 05/01 - 05/08 (258)
- 04/24 - 05/01 (154)
- 04/17 - 04/24 (99)
- 04/10 - 04/17 (82)
- 03/27 - 04/03 (41)
- 03/20 - 03/27 (72)
- 02/27 - 03/06 (50)
- 01/09 - 01/16 (2)
- 12/19 - 12/26 (3)
- 12/05 - 12/12 (1)
- 11/28 - 12/05 (34)
- 11/21 - 11/28 (13)
- 11/14 - 11/21 (27)
- 11/07 - 11/14 (22)
- 10/31 - 11/07 (35)
- 10/24 - 10/31 (61)
Showing posts with label all acters tamil. Show all posts
Showing posts with label all acters tamil. Show all posts
Saturday, December 3, 2011
Saturday, October 15, 2011
Wednesday, June 1, 2011
Saturday, May 28, 2011
all acters tamil,
at
3:29 PM
Posted by
prince
0
comments
இது தீபிகா ஸ்பெஷல்
ராணா படப்பிடிப்புக்காக சென்னை வந்த தீபிகா படுகோனேவுக்கு செம கவனிப்பு. அவங்க மனசு கோணாம பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார். அவர் எந்த ஓட்டலில் வேண்டுமானாலும் தங்கட்டும் என்று சென்னையில் புகழ்பெற்ற மூன்று ஓட்டல்களில் ரூம் போட்டிருந்தார்களாம்.
படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல பென்ஸ் கார் தயாராக நின்றது வாசலில். இதையெல்லாம் கவனித்து உணர்ந்த தீபிகாவுக்கு மனசு நிறைந்தது. அப்படியே வயிறையும் நிறைய வைத்தார் ரஜினி மகள் சவுந்தர்யா. ஓட்டல் சாப்பாடு வேண்டுமென்றால் ஓ.கே.
இல்லையென்றால் என் வீட்டிலிருந்து சாப்பாடு வரும் என்று சொன்னதோடு நில்லாமல் தினமும் மூன்று வேளையும் அனுப்பி வைத்தாராம். விதவிதமான இந்த தென்னிந்திய ஸ்டைல் சாப்பாடு சென்னையையும் சவுந்தர்யாவையும் மறக்கவே விடாது தீபிகாவை.
கோ பெரிய ஹிட் படம்தான் என்றாலும் அப்படத்தில் நடித்த வில் புருவ அழகி கார்த்திகாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய படங்கள் வரவில்லை. அதற்காக சும்மாயிருந்துவிட முடியுமா? தன்னை முதலில் வேண்டாம் என்று ஒதுக்கிய சிம்புவையே தொடர்பு கொண்டு பேசிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, தமிழ் படங்களில் நடிக்கும் இளம் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நல்ல நட்பை தொடர வேண்டும் என்றும் நினைக்கிறாராம். மும்பை போல பார்ட்டி கலாச்சாரம் இங்கு சரிபட்டு வராது என்று அம்மா கூறிவிட்டதால், அவர்களோடு நட்பு கொள்ள என்ன வழி என்று தேடிக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு பேட்டி விடாமல் சிம்பு, ஜீவா, கார்த்தி என்று பலரையும் புகழ்ந்து கொண்டிரு. அதுவே பெரிய வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்றாராம் அம்மா ராதா. அதைதான் செய்து கொண்டிருக்கிறார் மகளும்.
அஞ்சலியின் லவ்வர் யார்?
ஏஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் ஜெய்யும் நடிக்கிறார். இவருக்கு ஜோடி அஞ்சலி. இது போதாதா? சில முன்னணி வார இதழ்களில் இரண்டு பேருக்கும் லவ் என்று எழுதிவிட்டார்கள். இதை படித்து வாய் நிறைய புன்னகைத்தாராம் அஞ்சலி. எழுதறதுதான் எழுதறீங்க.
எனக்கு புடிச்ச ஹீரோக்களோட எழுத வேண்டியதுதானே என்று கமெண்ட் வேறு அடித்தாராம். யாருன்னு சொன்னா எழுதுவோம்ல என்று பதிலுக்கு கேட்ட நிருபரிடம், அதை நீங்களே கண்டு பிடிங்க என்றாராம். சுற்றி வளைத்து விசாரித்தால் அங்காடி தெரு மகேஷ§டன்தான் இன்னும் அன்பாக இருக்கிறாராம் அஞ்சலி. அவன் பெஸ்ட் பிரண்ட்.
அது மட்டுமல்ல, என்னுடைய பல விஷயங்களை நான் அவன்கிட்டதான் ஷேர் பண்ணிப்பேன் என்கிறார் அஞ்சலி. இந்த நெருக்கமான அவன் இவனுக்குதான் அர்த்தம் புரியாமல் தவிக்கிறது ஏரியா.
அழைத்தாரா ரஜினி?
முன்பெல்லாம் எந்த திரைப்பட நிகழ்ச்சி நடந்தாலும் வருகிறார்களோ, இல்லையோ. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பெயரை அழைப்பிதழில் போடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் துவங்கப்பட்ட ராணா பட விழாவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர்கள் சிலரை அழைக்கவே இல்லையாம் ரஜினி.
அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பிடிக்காத கே.ஆர்.ஜி., கே.ஆர் ஆகிய இருவரையும் விழாவுக்கு அழைத்திருந்தாராம். இது ஒருபுறம் நிருபர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்னொரு புறம் இதே வேலையை செய்திருக்கிறார் ஓம் என்ற படத்தை தயாரித்து வரும் ஷக்தி சிதம்பரம்.
இவர் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் துவக்க விழாவை ஜோராக நடத்தினார். அழைப்பிதழில் இவரும் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களின் பெயரை போடவில்லை. நேரிலும் வரச்சொல்லி அழைக்கவில்லை. தேர்தல் முடிவு தெரிகிற வரைக்கும் இந்த இழுபறி தொடர்வது சகஜம்தான்.
அஜீத் கலைத்தது ஏன்?
தனது ரசிகர் மன்றத்தை அஜீத் ஏன் கலைத்தார் என்பது குறித்து பவ்வேறு தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கலைப்பு விஷயத்தில் அஜீத் அதிக அக்கறை காட்டியதே விஜய் ரசிகர் மன்றம் உடைக்கப்பட்ட அதிர்ச்சியால்தானாம்.
விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெயசீலன் திடீரென்று திமுக வில் இணைந்ததை எதிர்பார்க்கவே இல்லை விஜய்யும் அவரது அப்பாவும். அதுமட்டுமல்ல, இப்படி வெளியேறிய அவர் விஜய் குடும்பத்தின் மீது சொன்ன புகார்கள் அத்தனையும் பகீர் ரகம்.
தனது ரசிகர் மன்றத்தையும் வளர விட்டால் நாளைக்கு அரசியல் சிக்கல் வரும் என்று நினைத்த அஜீத், இந்த சம்பவத்திற்கு பிறகுதான் வேண்டாம் என்று முடிவெடுத்தாராம். அவர் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. அஜீத் ரசிகர் மன்றத்தின் சில மாவட்ட தலைவர்கள் பிரபல கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
நீங்கள் அஜீத்துடன் இணக்கமாக இருப்பதால்தான் உங்களுக்கு மரியாதை. அவரே உங்களை விலக்கிய பிறகு நீங்கள் செல்லாக் காசுதான். உங்களை எதற்கு கட்சியில் சேர்த்து பெரிய பதவிகள் தர வேண்டும் என்கிறார்களாம் சம்பந்தப்பட்ட கட்சிகளில். தெரிந்தேதான் கலைத்திருக்கிறார் அஜீத்.
all acters tamil,
at
11:42 AM
Posted by
prince
0
comments
மதில் மேல் பூனை விஜய்
வெற்றி செய்தி வருகிற வரைக்கும் மதில் மேல் பூனையாக பம்மாத்து பண்ணிக் கொண்டிருந்த விஜய், தேர்தல் முடிவுக்கு பிறகு தைரியமாக ஜெயலலிதாவை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதே சந்திப்பு தேர்தலுக்கு முன் நிகழ வேண்டும் என்று பலரும் முயன்றார்கள்.
அப்போதெல்லாம் அஞ்சி ஒதுங்கிய விஜய், வெற்றி பெற்றதும் வந்து நிற்பது பெரிய சந்தர்ப்பவாதம். இதை அந்த அம்மா மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொரும ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் சிலர். இதற்கிடையில் வேலாயுதம் படத்தை சன் டிவி முயல்வதாகவும், விஜய் அதை தடுப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் எழுதியிருந்தோம்.
இப்போது தெம்பாகிவிட்டார் விஜய். தனது முடிவை மாற்றிக் கொண்டாராம் ஆஸ்கர் ரவி. முன்னொரு காலத்தில் ஜெயா டிவிக்கு படங்கள் வாங்கி தரும் வேலையை செய்து கொண்டிருந்தார் இவர். இப்போது மீண்டும் அந்த பணியை துவங்கக் கூடும்.
நாசரின் தாராள மனசு
ஈழ தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை இயக்கியவர் புகழேந்தி தங்கராஜ். தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இவர். இதில் சத்யராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அழைத்தாராம் நாசரை.
கதையை கேட்ட நாசர், இதுபோன்ற கதைகளில் நடிப்பது எனக்கு பெருமை. அது மட்டுமல்ல, நீங்கள் ஈழ பிரச்சனையில் எழுதிய கட்டுரைகளையும் முழக்கங்களையும் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க பணம் வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
கொள்கை பற்றி பேசும் போது அதிர அதிர பேசும் சத்யராஜ், காசு விஷயத்தில் கறாராக இருப்பார் எப்போதும். நாசர் இப்படி சொன்னது அவரை வெட்கப்பட வைத்ததாம். அதற்காக? வெட்கப்பட்டதோடு அமைதியாக இருந்துவிட்டார் அவர். சம்பளத்தை திருப்பி கொடுக்க முடியாதில்லை அல்லவா?
பெப்சியில் பிரச்சனை
கடந்த சில தினங்களுக்கு முன் பெப்ஸி அமைப்பில் ஒரு புதிய அரங்கத்தை திறந்து வைத்தார் அதன் தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு கலைஞர் அரங்கம் என்று பெயர் வைத்ததுடன், அங்கு அவரது படத்தையும் வைத்திருந்தாராம்.
இதை கண்டித்த சங்கத்தின் செயலாளர் பெப்சி சிவா படத்தை வெளியே எடுத்து வைத்துவிட்டாராம். அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்தார்களாம் சிலர். இதெல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தியதாம் குகநாதனுக்கு. இருந்தாலும் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தார் அவர். ஆனால் ரிசல்ட் மேலும் மன உளைச்சலை அதிகரித்ததுதான் கொடுமை.
உடனே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவரைப் போலவே தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விட்டு விலகிக் கொண்டார் ராம.நாராயணன். இதெல்லாம் போதாது. அத்தனை பேரும் பதவி விலக வேண்டும் என்று கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். என்ன நடக்கப் போகிறதோ?
ரஜினி வந்தால்தான்
தான் வாங்கி வெளியிட்ட மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட மூன்று படங்களின் வெற்றி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட நினைத்தார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக நேரு விளையாட்டு அரங்கத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.
ஆனால் விழாவுக்கு வந்து சிறப்பிப்பதாக சொல்லியிருந்த ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். இதில் பயங்கர அப்செட் ஆன உதயநிதி, அவர் எப்போது வந்து மீண்டும் தேதி கொடுக்கிறாரோ. அப்போது விழாவை வைத்துக் கொள்ளலாம்.
அதுவரைக்கும் இந்த விழா பற்றிய பேச்சே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஆனால் இன்னும் ஒரு மாதமாகவாவது பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இந்த விழா சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள் திரையுலகத்தில்.
சிம்பு ஃபீல் பண்ணவில்லையாம்
எல்லா படத்தையும் விடாமல் பார்த்துவிடும் சிம்பு, இன்னும் கோ படத்தை மட்டும் பார்க்கவே இல்லை. எல்லாம் வெறுப்புதான். ஆனால் நான் சொன்னது சரியா போச்சா என்று அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு செய்தி இதுதான்.
இந்த படத்தின் கதையை கேட்டதும், அஜ்மல் கேரக்டரை ஏன் கெட்டவனாக சித்தரிக்க வேண்டும்? அவனையும் நல்லவனாக காட்டலாமே என்றாராம் சிம்பு. அதை தொடர்ந்த இழுபறியில்தான் அப்படத்திலிருந்து விலகினார் அவர். இப்போது வரும் கோ பட விமர்சனங்களிலும் இதே கருத்தை சில பத்திரிகைகள் எழுதுகின்றன.
இதைதான் சொல்லி சொல்லி மாய்கிறாராம் அவர். இப்பவும் அந்த படம் கையை விட்டு போச்சே என்று நான் பீல் பண்ணவே இல்லை என்கிறாராம் அவர். எது எப்படியோ? என் படமும் ஹிட்டுதான் என்று வெளியில் காட்டிக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பார்ட்டி கொடுத்திருக்கிறார் சிம்பு. ஆனால் நிஜம் அதுவல்ல என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
all acters tamil,
at
11:34 AM
Posted by
prince
0
comments
முத்தம் தராத அஜீத்
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு பாலிஸியாகவே வைத்திருக்கிறார் அஜீத். அப்படியிருந்தும் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு. த்ரிஷாவும் ஆசையாக காத்திருந்தாராம்.
ஆனால் நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம் அஜீத். அப்புறம் வேறு வழியில்லாமல் அதை ட்ரிக் ஷாட் என்று சொல்லப்படும் முறையில் எடுத்தார்களாம். இதற்கிடையில் இன்னொரு செய்தி மங்காத்தா பற்றி.
இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் பேமெண்ட் தேர்தல் முடிவுக்கு பிறகு தரப்படும் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் முடிவு வேறு மாதிரி ஆனதால் குழம்பி போயிருக்கிறார்களாம் அத்தனை பேரும்.
ராணா கைவிடப்படுமா?
போகிற போக்கை பார்த்தால் ராணா படம் கைவிடப்படும் என்றே தெரிகிறது. ரஜினி உடல் நலம் தேறி வந்தாலும் ஆறு மாதங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறார்களாம் மருத்துவர்கள்.
அதுமட்டுமல்ல, சென்ட்டிமென்ட் பார்க்கிற விஷயத்தில் ரஜினியை போல இன்னொருவரை பார்க்க முடியாது என்கிறார்கள் திரையுலகத்தில். ராணா துவங்கிய முதல் நாளே தன்னை மருத்துவமனைக்கு அனுப்பிய சென்ட்டிமென்ட்டை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கணிக்கிறார்கள்.
எனவே இந்த படம் தொடர்ந்தாலும் அதில் ரஜினி நடிக்க மாட்டார். மாறாக இவரது கிராபிக்ஸ் போர்ஷனை மட்டும் வைத்துக் கொண்டு சரத்குமார் போன்ற சில ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை முடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ? கே.எஸ்.ரவிகுமாரின் சென்ட்டிமென்ட்தான் எல்லாவற்றையும் விட பலமாக இருக்கிறது.
மீண்டும் வி.சி.குகநாதன்?
ஆட்சி மாற்றம் நடந்ததும் எல்லா சினிமா சங்கங்களின் தலைவர்களும் பட் பட்டென்று ராஜினாமா கடிதம் கொடுத்து வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், என்று பரபரப்பாகிக் கிடக்கிறது சங்கங்கள். இதற்கிடையில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.
அடிக்கடி கருணாநிதியை பார்க்கிறேன். இப்போது புதிய முதல்வரிடம் சென்று உதவிகள் கேட்பது கூச்சமாக இருப்பதால் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன். இப்போது அந்த ராஜினாமாவை சங்கத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்கவில்லையாம்.
தொடர்ந்து அவரே பணியாற்ற வேண்டும் என்று அவசர பொதுக்குழு கூடி தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்த மாற்றம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரபரப்பில் ரஜினி விவகாரம்
ரஜினியின் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடும் என்று பேச்சிருந்தாலும், அதற்கு அவசியம் இல்லை என்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
இதற்கிடையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ரஜினியின் கார் சென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தது. கால்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டாராம் அவர். மூச்சு திணறலும் இருந்தது. இதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு பல்வேறு சிகிச்சைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை மிக ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறது மருத்துவமனை. காரணம் ரஜினி ரசிகர்கள் அங்கே திரண்டு வந்து நின்றால் என்னாவது என்ற அச்சத்தினால்தானாம். இது குறித்து போன் செய்யும் நிருபர்களிடம் கூட இங்கு ரஜினி சார் இல்லையே.
அவர் வீட்டுக்கு போயிட்டாரே என்றே பதில் சொல்கிறார்கள். ரஜினியே தனக்கு ஒன்றுமில்லை என்று பேட்டி கொடுக்கிற வரைக்கும் பரபரப்பு ஓயாது போலிருக்கிறது
விவேக்கின் தர்ம சங்கடம்
எந்திரன் படத்தை அப்படியே உல்டா பண்ணி ஷக்தி சிதம்பரம் ஒரு படம் எடுப்பதாக பேச்சிருக்கிறது. அதே மாதிரி இன்னொரு காமெடி டிராக் ரெடி செய்து வைத்திருக்கிறாராம் விவேக்.
ஆனால் அவ்வளவு நன்றாக வந்த அந்த டிராக்கை இப்போது கையில் வைத்துக் கொண்டு தவியாய் தவிக்கிறார் அவர். காரணம், இந்த டிராக்கை அவர் தயார் செய்தது டைரக்டர் சாமி இயக்கும் படத்திற்காக. இப்போது படமே டிராப் என்ற தகவல் வந்துவிட்டது. சரி போகட்டும். எழுதிய காமெடி டிராக்கை அப்படியே வேறு படங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலை மிச்சம் என்று நினைத்தாராம்.
ஆனால் இது எங்க படத்திற்காக உருவாக்கியது. வேறு எங்கும் விற்க கூடாது. நான் படம் எடுக்கிற வரைக்கும் பொறுமையா இருக்கணும் என்று கூறிவிட்டாராம் சாமி. வேறு டைரக்டர் என்றால் நடப்பது நடக்கட்டும் என்று வேறொருவருக்கு விற்கலாம். ஆனால் இவரோ விவகாரமான ஆள் ஆச்சே. பொறுத்திருக்கிறார் விவேக்.
all acters tamil,
at
11:30 AM
Posted by
prince
0
comments
ஜெ.வுக்கு கொடுக்க மனு
புதிய முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றிருக்கிறார். அவர் வெற்றி பெற்று வந்தவுடன் திரையுலகில் பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அவர் முன்பு போல சினிமாவை கண்டு கொள்ளப் போவதில்லை என்றுதான்.
ஏனென்றால் கடந்த ஆட்சியில் எந்தளவுக்கு பழைய முதல்வருக்கு சினிமாக்காரர்கள் ஜால்ரா அடித்தார்கள் என்பதை கண் கூடாக அவர் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இனிமேல் சினிமா காரர்களை அருகில் சேர்க்கவே மாட்டார் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
ஆனால் திரையுலக பிரமுகர்களில் முக்கியமான சிலரை சந்திக்கப் போகிறாராம் அவர். இந்த சந்திப்பின் போது என்னென்ன சலுகைகள் வேண்டும் என்று பெரிய பட்டியலே போட்டுக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
அதில் ஒன்று பையனு£ரில் கட்டி வரும் தொழிலாளர்களுக்கான வீடுகளை முற்றிலும் இலவசமாகவே கொடுக்க வேண்டும் என்பது. முதல்வர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?
திமுக வில் வடிவேலு?
எந்த நல்ல காரியம் செய்தாலும் அதை குலதெய்வம் கோவிலில் போய் குறி கேட்டு செய்வதுதான் வடிவேலுவின் வழக்கம். இந்த தேர்தலில் ஓட்டு கேட்க போன போது கூட அதைதான் செய்தார். ஆனால் துரதிருஷ்டம் துரத்த ஆரம்பித்துவிட்டது அவரை.
பேசாமல் கட்சியில் சேர்ந்திடு. யாரும் நெருங்க மாட்டாங்க என்று அட்வைஸ் கொடுக்கிறார்களாம். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அவரை சுற்றி எழுப்பப்படுகிற சதி வலைகள் அந்த முடிவை நோக்கிதான் போக வைக்கும் போலிருக்கிறது.
யாரும் வடிவேலுவை புக் பண்ண வேண்டாம் என்று வாய் மொழி உத்தரவு போயிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு. அதை மீறி படங்களை பிடிக்க முடியாது. பிடித்தாலும் அவுட்டோர் ஷ§ட்டிங் போனால் அடி நிச்சயம் என்று நினைக்கிறாராம் வடிவேலு. கட்சிதான் கை கொடுக்கும் போலிருக்கிறது.
மருத்துவ முடிவு, ரஜினி திருப்தி
ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி… என்று ரஜினி பாடிய பாடலுக்கு அவரே இப்போதுதான் முழு அர்த்தத்தையும் உணர்ந்திருப்பார். இத்தனை நாட்களும் மருத்துவமனை பக்கமே எட்டிப்பார்க்காத தனுஷ் இப்போது வந்தது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கேற்றார் போல காதில் விழும் அரசல் புரசல் தகவல்கள் இன்னும் கொடுமை. ரஜினியின் சொத்து விவகாரங்கள் மருத்துவமனையில் அலசப்பட்டதாகவும், யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது பற்றியும் பேசப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எல்லா யூகங்களையும் பொய்யாக்கிவிட்டு உற்சாகமாக வருவார் ரஜினி.
அப்போது இவர்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களோ என்று ஆத்திரப்படுகிறார்கள் இந்த விபரத்தை அரசல் புரசலாக அறிந்த ரஜினியின் நலம் விரும்பிகள். அதற்கு ஏற்றார் போல ரஜினிக்கு கேன்சராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் செய்யப்பட்ட சில பரிசோதனைகள் முடிவு வந்திருக்கிறதாம். அதில் அவருக்கு அப்படி எதுவும் இல்லை என்ற முடிவுதான் விசேஷமான செய்தி.
மாட்டிக் கொண்ட அர்ஜுன
மங்காத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். ஆச்சரியமான தகவல் ஒன்று. இவர் இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் படத்தின் நாயகனாக பேசப்படும் அஜீத்தின் கால்ஷீட்டுக்கு கொஞ்சமும் குறைவானத்தல்ல.
படம் முழுக்க வருகிற வேடம் அவருக்கு என்கிறார்கள். இதற்கிடையில் அர்ஜுன் நடிக்கும் ஓம் படத்தை தயாரிக்கிறார் ஷக்தி சிதம்பரம். துவக்க நாளில் இருந்தே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கால்ஷீட் கொடுத்திருந்த அர்ஜுன் இன்னும் மங்காத்தா முடியவில்லை. முடிந்ததும் ஓம் ஷ§ட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டாராம் இப்போது.
ரஜினியை தன் குருநாதராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். கடந்த சில வாரங்களாக ரஜினி குறித்து வரும் தகவல்களை அக்கறையாக விசாரிக்கும் இவர், அவரை நேரில் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறாராம்.
ஆனால் இவரை விட முக்கியமான நபர்களையே உள்ளே விடாமல் வைத்திருக்கிறார்கள். இவர் என்னதான் செய்வார்? ரஜினி உடல் நலம் தேறியவுடன் மீட் பண்ணுவேன்ங்கிற நம்பிக்கை இருக்கு என்று கூறிக் கொண்டே இருக்கிறாராம்.
முதலில் விஜய், அப்புறம் சாந்தனு
தற்போது கண்டேன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் முகில் என்பவர்தான் விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரை அசத்தியிருந்தாராம். ஆர் பி சவுத்ரி இந்த கதையை கேட்டுவிட்டு உடனே அட்வான்சை கொடுத்திருந்தார்.
ஒரு பக்கம் பணம் ரெடி. ஏனென்றால் தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் அல்ல. இன்னொரு பக்கம் ஹீரோ ரெடி. விஜய் யார் பேச்சை கேட்டும் கதை நன்றாக இருக்கு என்று ஜால்ரா அடிப்பவரல்ல. அப்படியிருந்தும் இந்த கதையை படமாக்குகிற யோகம் மட்டும் முகிலுக்கு வரவே இல்லை.
என்னென்னவோ காரணத்தால் படத்தை ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்ததாம். இனிமேல் காத்திருந்தால் ஆகாது என்று நினைத்தவர் சட்டென்று கிளம்பி சாந்தனுவை சந்தித்து வேறு கதையை சொன்னாராம்.
அவ்வளவுதான் புதிய தயாரிப்பாளர் ஒருவர் பணம் போட முன் வரவும் படப்பிடிப்புக்கு கிளம்பி படத்தையும் முடித்துவிட்டார். கண்டேன் பார்த்துவிட்டு விஜய்யும் சவுத்திரியும் மீண்டும் பழைய கூட்டணியை தொடர்வார்களோ என்னவோ?
all acters tamil,
at
11:25 AM
Posted by
prince
0
comments
இலியானாவின் இஷ்டம்
ஆந்திராவில் இலியானாவுக்கான செல்வாக்கு எத்தனை பிளாப் கொடுத்தாலும் குறைந்ததே இல்லை. அவர் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பதால் ஹீரோக்களின் அட்டை படங்களை விட இலியானாவின் படத்தை அட்டையில் போட்டு அமர்க்களமாக சம்பாதிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அவர் ஒரு பேட்டிக் கொடுக்கப் போக, அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமே நடந்து வருகிறதாம். காதல் கல்யாணம்தான் சிறந்தது. வீட்டில் பார்க்கும் திருமணம் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நன்றாக அமையும். இல்லையென்றால் எதிர்காலமே கேள்விக்குறிதான்.
நாமே நேரடியாக பார்த்து பழகிய ஆண் திருமணத்திற்கு பிறகு மாறப்போவதில்லை. அதனால்தான் நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறேன்.
அவர் யார் என்பது எனக்கே தெரியாது. அவர் எங்குதான் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார் இலியானா. இவர் இப்படி சொன்னாலும், அந்த காதலர் யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களாம் ரசிகர்கள்.
சௌந்தர்யா கோபம்
ராணா கைவிடப்பட்டதாக ஒரு முன்னணி நாளிதழ் கிசுகிசு டைப்பில் ஒரு செய்தியை போட்டுவிட்டது. அவ்வளவுதான். கொந்தளித்து போய்விட்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா. காரணம், இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை பார்த்து வருவது அவர்தான்.
அதுமட்டுமல்ல, ஈராஸ் நிறுவனம் பெருமளவு பணத்தை முன்பே இறக்கிவிட்டதாம். படம் போட்டவுடனேயே எங்களுக்கு உங்களுக்கு என்று மொய்த்துக் கொண்டிருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்தால் சும்மாயிருப்பார்களா? ஆளாளுக்கு போன் செய்து அப்படியா விஷயம் என்கிறார்களாம்.
இதனால் கடும் கோபமுற்ற சௌந்தர்யா, சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு போன் செய்து காய்ச்சி எடுத்துவிட்டாராம். உங்க பாட்டுக்கு எழுதாதீங்க. வழக்கு தொடருவேன் என்றும் எச்சரித்தாராம். அவரவர் கஷ்டம் அவரவருக்கு. யாரை நொந்து கொள்வது?
அபாயத்தை தாண்டிய ரஜினி
அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ரஜினி. இந்த நேரத்தில்தான் அவரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம் மருத்துவர்கள். இவர்கள் சொல்வதை அவ்வப்போது மீறி விடுகிறாராம் ரஜினி.
கடந்த சில வாரங்களுக்கு முன் இசபெல்லா மருத்துவமனையில் இருந்த போதுதான் அதுதான் நடந்ததாம். வாக்கிங் போகிறேன் என்று வெளியே காலாற நடந்த ரஜினி, அப்படியே கார் ஏறி வீட்டுக்கே போய்விட்டாராம். அப்புறம்தான் நிலைமை ரொம்ப சீரியஸ் ஆனது. அதுபோல் ஆகிவிட கூடாது என்பதற்காகதான் இந்த முறை ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டாராம்.
அவரை நான்தான் அருகிலிருந்து பார்த்துக் கொள்வேன் என்று குடும்ப உறுப்பினர்கள் ஆளாளுக்கு ஆசைப்பட என் பால்ய கால சினேகிதன் ராஜ்பகது£ர் என்னுடன் இருந்தால் போதும் என்று கூறிவிட்டாராம் ரஜினி.
அவர்தான் கூடவே இருக்கிறார். இதற்கிடையில் ரஜினியை பார்க்கப் போன குஜராத் முதல்வர் மோடியுடன் தமிழக தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் இருவருமே போயிருந்தார்கள். இவர்களை கேட்டால் உண்மையை கூறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இவரை தொடர்பு கொண்டனர் சில பத்திரிகையாளர்கள். அவர்களிடம், எங்களை வெளியே நிறுத்திட்டாங்க. மோடி மட்டும்தான் உள்ளே போனார் என்று கூறி சமாளிக்கிறார்களாம் இருவரும்.
ராணா கைவிடப்பட்டதா, இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த படத்தின் தாமதத்தை பார்க்கிற மணிரத்னம் நகத்தை கடித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம். காரணம், தான் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரஹ்மானிடம் கதை சொல்லப் போனார் மணி.
முழு கதையையும் கேட்ட இசைப்புயல், இந்த கதையின் பல காட்சிகள் அப்படியே ராணா படத்தில் இருக்கு. அதுமட்டுமல்ல, அப்படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிகுமார் என்பதால் உங்கள் படத்திற்கு முன்பாகவே வந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் நீங்கள் பொன்னியின் செல்வனை கைவிடுவதே நல்லது என்று கூறினாராம். இதையும் யோசித்துப் பார்த்த மணி அப்படத்தை கைவிட்டு விட்டார். ஆனால் திடீரென்று ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல, ஆறு மாதங்களுக்காவது சினிமா ஷ§ட்டிங்குக்கு செல்லக் கூடாது.
அப்படியே போனாலும் முன்பு போல துள்ளி குதிப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்களாம் டாக்டர்கள். பேசாமல் பொன்னியின் செல்வனை நாம் எடுத்திருக்கலாமோ என்று இப்போதும் மணிரத்னம் நினைக்க வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்…
நயன்தாரா மறுத்த பாலிவுட் வாய்ப்பு
சல்மான்கான் நடிப்பில் வாண்டட் என்ற படத்தை இயக்கினார் பிரபுதேவா. இந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்கலாம் என்று கூறியிருந்தாராம் சல்மான். சமீபத்தில் பிரபுதேவாவுக்கும் முறைப்படி அழைப்பு வந்திருக்கிறதாம் அவரிடமிருந்து.
பேச்சு வார்த்தையை நல்லபடியாக முடித்த பிரபுதேவா, விரைவில் அந்த படத்தைதான் இயக்குவார் என்று தெரிகிறது. ஆனால் இதில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க தனது வருங்கால மனைவி நயன்தாராவையே செலக்ட் பண்ணினாராம் பிரபுதேவா. ஆனால் இனிமேல் குடும்ப வாழ்க்கைதான்.
விளம்பர படங்களுக்காக கூட அரிதாரம் பூசப் போவதில்லை என்று சற்று அழுத்தமாகவே கூறினாராம் நயன்தாரா. இந்திப்பட வாய்ப்பு. அதுவும் சல்மானுடன். இப்படி கைவிட்டுட்டாரே என்று கவலைப்படுகிறார்கள் சக நடிகைகளில் சிலர்.
Subscribe to:
Posts (Atom)














