ஜெ.வுக்கு கொடுக்க மனு
புதிய முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றிருக்கிறார். அவர் வெற்றி பெற்று வந்தவுடன் திரையுலகில் பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அவர் முன்பு போல சினிமாவை கண்டு கொள்ளப் போவதில்லை என்றுதான்.
ஏனென்றால் கடந்த ஆட்சியில் எந்தளவுக்கு பழைய முதல்வருக்கு சினிமாக்காரர்கள் ஜால்ரா அடித்தார்கள் என்பதை கண் கூடாக அவர் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இனிமேல் சினிமா காரர்களை அருகில் சேர்க்கவே மாட்டார் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
ஆனால் திரையுலக பிரமுகர்களில் முக்கியமான சிலரை சந்திக்கப் போகிறாராம் அவர். இந்த சந்திப்பின் போது என்னென்ன சலுகைகள் வேண்டும் என்று பெரிய பட்டியலே போட்டுக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
அதில் ஒன்று பையனு£ரில் கட்டி வரும் தொழிலாளர்களுக்கான வீடுகளை முற்றிலும் இலவசமாகவே கொடுக்க வேண்டும் என்பது. முதல்வர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?
திமுக வில் வடிவேலு?
எந்த நல்ல காரியம் செய்தாலும் அதை குலதெய்வம் கோவிலில் போய் குறி கேட்டு செய்வதுதான் வடிவேலுவின் வழக்கம். இந்த தேர்தலில் ஓட்டு கேட்க போன போது கூட அதைதான் செய்தார். ஆனால் துரதிருஷ்டம் துரத்த ஆரம்பித்துவிட்டது அவரை.
பேசாமல் கட்சியில் சேர்ந்திடு. யாரும் நெருங்க மாட்டாங்க என்று அட்வைஸ் கொடுக்கிறார்களாம். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அவரை சுற்றி எழுப்பப்படுகிற சதி வலைகள் அந்த முடிவை நோக்கிதான் போக வைக்கும் போலிருக்கிறது.
யாரும் வடிவேலுவை புக் பண்ண வேண்டாம் என்று வாய் மொழி உத்தரவு போயிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு. அதை மீறி படங்களை பிடிக்க முடியாது. பிடித்தாலும் அவுட்டோர் ஷ§ட்டிங் போனால் அடி நிச்சயம் என்று நினைக்கிறாராம் வடிவேலு. கட்சிதான் கை கொடுக்கும் போலிருக்கிறது.
மருத்துவ முடிவு, ரஜினி திருப்தி
ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி… என்று ரஜினி பாடிய பாடலுக்கு அவரே இப்போதுதான் முழு அர்த்தத்தையும் உணர்ந்திருப்பார். இத்தனை நாட்களும் மருத்துவமனை பக்கமே எட்டிப்பார்க்காத தனுஷ் இப்போது வந்தது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கேற்றார் போல காதில் விழும் அரசல் புரசல் தகவல்கள் இன்னும் கொடுமை. ரஜினியின் சொத்து விவகாரங்கள் மருத்துவமனையில் அலசப்பட்டதாகவும், யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது பற்றியும் பேசப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எல்லா யூகங்களையும் பொய்யாக்கிவிட்டு உற்சாகமாக வருவார் ரஜினி.
அப்போது இவர்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களோ என்று ஆத்திரப்படுகிறார்கள் இந்த விபரத்தை அரசல் புரசலாக அறிந்த ரஜினியின் நலம் விரும்பிகள். அதற்கு ஏற்றார் போல ரஜினிக்கு கேன்சராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் செய்யப்பட்ட சில பரிசோதனைகள் முடிவு வந்திருக்கிறதாம். அதில் அவருக்கு அப்படி எதுவும் இல்லை என்ற முடிவுதான் விசேஷமான செய்தி.
மாட்டிக் கொண்ட அர்ஜுன
மங்காத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். ஆச்சரியமான தகவல் ஒன்று. இவர் இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் படத்தின் நாயகனாக பேசப்படும் அஜீத்தின் கால்ஷீட்டுக்கு கொஞ்சமும் குறைவானத்தல்ல.
படம் முழுக்க வருகிற வேடம் அவருக்கு என்கிறார்கள். இதற்கிடையில் அர்ஜுன் நடிக்கும் ஓம் படத்தை தயாரிக்கிறார் ஷக்தி சிதம்பரம். துவக்க நாளில் இருந்தே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கால்ஷீட் கொடுத்திருந்த அர்ஜுன் இன்னும் மங்காத்தா முடியவில்லை. முடிந்ததும் ஓம் ஷ§ட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டாராம் இப்போது.
ரஜினியை தன் குருநாதராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். கடந்த சில வாரங்களாக ரஜினி குறித்து வரும் தகவல்களை அக்கறையாக விசாரிக்கும் இவர், அவரை நேரில் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறாராம்.
ஆனால் இவரை விட முக்கியமான நபர்களையே உள்ளே விடாமல் வைத்திருக்கிறார்கள். இவர் என்னதான் செய்வார்? ரஜினி உடல் நலம் தேறியவுடன் மீட் பண்ணுவேன்ங்கிற நம்பிக்கை இருக்கு என்று கூறிக் கொண்டே இருக்கிறாராம்.
முதலில் விஜய், அப்புறம் சாந்தனு
தற்போது கண்டேன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் முகில் என்பவர்தான் விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரை அசத்தியிருந்தாராம். ஆர் பி சவுத்ரி இந்த கதையை கேட்டுவிட்டு உடனே அட்வான்சை கொடுத்திருந்தார்.
ஒரு பக்கம் பணம் ரெடி. ஏனென்றால் தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் அல்ல. இன்னொரு பக்கம் ஹீரோ ரெடி. விஜய் யார் பேச்சை கேட்டும் கதை நன்றாக இருக்கு என்று ஜால்ரா அடிப்பவரல்ல. அப்படியிருந்தும் இந்த கதையை படமாக்குகிற யோகம் மட்டும் முகிலுக்கு வரவே இல்லை.
என்னென்னவோ காரணத்தால் படத்தை ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்ததாம். இனிமேல் காத்திருந்தால் ஆகாது என்று நினைத்தவர் சட்டென்று கிளம்பி சாந்தனுவை சந்தித்து வேறு கதையை சொன்னாராம்.
அவ்வளவுதான் புதிய தயாரிப்பாளர் ஒருவர் பணம் போட முன் வரவும் படப்பிடிப்புக்கு கிளம்பி படத்தையும் முடித்துவிட்டார். கண்டேன் பார்த்துவிட்டு விஜய்யும் சவுத்திரியும் மீண்டும் பழைய கூட்டணியை தொடர்வார்களோ என்னவோ?
0 comments:
Post a Comment