ஜெனிலியாவின் பிரச்சனை
நடிகைகள் எங்கு போனாலும் காதலும் கிசுகிசுவும் துரத்தும் போலிருக்கிறது. தமிழ், தெலுங்கிலிருந்து இந்திக்கு போன பின்பும் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லையாம் ஜெனிலியாவுக்கு.
இந்திப்பட நடிகர்களில் முக்கியமானவரான ரித்தேஷ§க்கும் ஜெனிலியாவுக்கும் காதல் இருந்தது. இந்த நேரத்தில்தான் டான்ஸ் பே சான்ஸ் என்ற படத்தில் சாகித் கபூருடன் நடிக்கப் போனார் ஜெனி.
படத்தின் பிரமோஷனுக்காக இருவருக்கும் லவ் என்று கிளப்பிவிட்டார்களாம். ஆனால் இதை நம்பவில்லை ரித்தேஷ். சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று இருந்துவிட்டராம். ஆனால் கிசுகிசுவை நிஜமாக்க முயல்கிறாராம் சாகித். இதுதான் பிடிக்கவில்லை ஜெனிலியாவுக்கும் ரித்தேஷ§க்கும்.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஐயய்யோ… என் உண்மையான காதலை குழிதோண்டி புதைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறதே என்று அந்த வாய்ப்பையே மறுத்தாராம் ஜெனி.
மன்றம்- சிம்பு தலையீடு
அஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்த விவகாரத்தில் பெரும் திருப்பம் இதுதான். நானும் அஜீத்தின் ஃபேன்தான். எனக்கும் அதில் வருத்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சிம்பு. இவரது பேஸ் புத்தகத்திற்கு அஜீத் ரசிகர்கள் நிறைய மெயில் அனுப்பி புலம்புகிறார்களாம்.
தல இப்படி பண்ணிட்டாரே. நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா என்று. இதை படித்த சிம்பு நான் இருக்கேன் உங்களுக்கு உதவ என்று இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டார். விரைவில் உங்களின் மனக்குமுறல்களை தல யிடம் சொல்வேன். நானே மன்றத்தை திரும்ப தொடர சொல்லி கேட்டுக் கொள்வேன் என்றெல்லாம் அவர்களுக்கு பதில் எழுதியிருக்கிறார். இதை தொடர்ந்து பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் சிம்புவின் பேச்சை அஜீத் கணக்கில் எடுத்துக் கொள்வாரா, அல்லது சிம்புவையே வீட்டுக்கு பக்கம் வந்திராதீங்க என்று விரட்டி விடுவாரா? அந்த தலய்க்கே வெளிச்சம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடிவேலுவை கடுமையாக விமர்சித்து ஒரு பேட்டியளித்திருந்தார் டைரக்டர் அமீர். விஜயகாந்த்தை பார்த்து எந்த கப்பலுக்கு கேப்டன்னு கேட்கிறாரே, இவரை கூடதான் வைகைப்புயல்னு சொல்றாங்க.
வடிவேலு எந்த மரத்தை சாய்த்தாராம் என்று அதில் கேள்வி கேட்ட அமீர், சரமாரியாக திட்டி தீர்ந்திருந்தார். இதை படித்த மேலிடத்து தலைவர் ஒருவர், இந்தாளுக்கு என்னாச்சு? இவர் இயக்கிக் கொண்டிருக்கிற படத்தை தயாரிப்பது நம்ம கட்சி மாவட்டம்தானே? அதையெல்லாம் புரிஞ்சு பேசுறாரா, இல்லையா? அமைதியா இருக்க சொல்லு அவரை என்று சொல்லியனுப்பினாராம்.
விஷயம் இவ்வளவு து£ரம் போயிடுச்சா என்று அதிர்ந்து போன அமீர் கப்சிப் ஆகிவிட்டார். யாராவது இது தொடர்பாக பேச ஆரம்பித்தாலே, விடுங்க. அது பற்றி பேசாதீங்க என்கிறாராம்.
தள்ளிப்போட்ட விமல்
முன்னணி நடிகர்கள் யார் திருமணம் செய்தாலும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழாவது வைப்பார்கள். சிலர் எல்லாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுப்பது சம்பிரதாயம். இந்த வழக்கம் எதையும் பின்பற்றவே இல்லை விமல்.
காரணம் இவரே அவசரம் அவசரமாக வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதுதான். ஒரு முறை வேறொரு பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தவர், விரைவில் உங்களையெல்லாம் அழைத்து உங்கள் முன்னிலையில் ஒருமுறை எங்கள் திருமணத்தை நடத்தணும்னு ஆசைப்படுறேன் என்றார்.
அந்த பிரஸ்மீட்டோடு அதையும் மறந்துவிட்டார். இப்போது விமல் அப்பாவாக ஆகப் போகிறாராம். மனைவி மூன்று மாத கர்ப்பம். பேசாம குழந்தையும் பிறந்தபின் குடும்பத்தோடு பிரஸ்சை மீட் பண்ணினா போச்சு. என்ன அவசரம்?
மிஸ்ஸான ஆட்டம்
மஹதீரா படத்தை மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். மஹதீராவில் ஹீரோவாக நடித்திருப்பவர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. மகன் படமாச்சே என்று ஒரு காட்சியில் சிரஞ்சீவியே ஆடியிருப்பார்.
படத்தை தமிழில் வெளியிடும் போது அந்த காட்சியும் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின். ஆனால் இல்லையாம். தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் சிரஞ்சீவிக்கு. நானே அவருடைய டான்சுக்கு ரசிகன்.
அப்படியிருக்கும் போது குறிப்பிட்ட அந்த காட்சியை எடுக்க வேண்டுமா? உடனே படத்தில் இணையுங்கள் என்று உத்தரவிட்டாராம். எல்லாம் சரி. மாவீரன் திரைக்கு வருவது எப்போது? அதை இன்னும் சொல்லலியே.
0 comments:
Post a Comment