பின்வாங்கிய சிம்பு
பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தில்லும் திராணியும் இல்லாதவர்கள்தான் ஆட்டமாக ஆடுகிறார்கள் என்பதற்கு மிக சரியான உதாரணம்தான் சிம்பு. கடந்த சில தினங்களுக்கு முன் வானம் படத்தில் இந்து மதம் தொடர்பான கட்சிகளை அவமானப்படுத்திவிட்டார் என்று அவரது கட்அவுட்டுக்கு செருப்பு மாலை போட்டனர் சில விஷமிகள்.
இதையடுத்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் சிம்புவின் ரசிகர்கள். பிறகு டி.ராஜேந்தர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அவர்களை அழைத்து வந்தார். இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது. ஆனால் சிம்புவுக்கு இதெல்லாம் தெரியாதாம். தபாங் படத்தை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் இயக்கவிருக்கிறார் தரணி.
இப்படத்தின் துவக்க விழாவில் கூடிய செய்தியாளர்கள் சிம்புவிடம் இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களிடம், அப்படியா. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாதே என்று பதிலளித்தார் அவர். இந்த பதிலை கேட்டு அழுவதா? சிரிப்பதா? என்று அதிர்ச்சியடைந்தார்கள் நிருபர்கள்.
ரஜினி நடித்த தில்லு முல்லு என்ற தலைப்பை போராடி வாங்கிவிட்டார் டைரக்டர் மாதேஷ். இந்த படத்தில்தான் வினய் ஹீரோவாக நடிக்கிறார். தலைப்பை போலவே படப்பிடிப்பிலும் பல வித்தைகளை காட்டுகிறாராம் மாதேஷ்.
இப்படத்தில் நடிக்கும் டெக்னிஷியன்கள் யாருக்கும் உருப்படியாக போய் சேரவில்லையாம் சம்பளம். அப்படி கொடுத்தாலும் தயாரிப்பாளர் உங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்கவே இல்லை. இது என்னோட கை பணம். நான் உங்களுக்கு கொடுத்துட்டு அவரிடம் வாங்கிக் கொள்கிறேன் என்கிறாராம்.
ஆனால் அப்படி கொடுக்கும் பணத்தையும் முழுசாக கொடுப்பதில்லையாம். தயாரிப்பாளர்தான் இவருக்கு தரவில்லையா? அல்லது வாங்கிய பணத்தில் பாதியை பிடித்துக் கொண்டு தருகிறாரா. இது பெரிய தில்லுமுல்லுவாக இருக்கே என்று முகம் சுளிக்கிறார்கள் தொழிலாளர்கள்.
இன்னும் ஒரு காரணம் இத
பொன்னியின் செல்வன் ஏன் டிராப் ஆனது என்பதற்கு தினம் ஒரு காரணமாக வெளிவந்து ரசிகர்களை குழப்பி வருகிறது. லேட்டஸ்ட்டாக வந்த ஒரு காரணம் நிஜமாகவே யோசிக்க வைப்பதுதான். இப்படத்தில் விஜய்தான் ஹீரோ. படத்தை தயாரிக்க முன் வந்தது சன் பிக்சர்ஸ்.
இவர்கள் தயாரித்தால் இதில் நான் நடிக்க மாட்டேன் என்றாராம் அவர். தனது சொந்தப்பணத்தில் இந்த படத்தை எடுக்க தயாராகிவிட்டாராம் மணி. ஆனால் அதற்கும் திடீர் முட்டுக்கட்டை வந்ததாம். யார் பேச்சை கேட்பது, யார் பேச்சை அலட்சியப்படுத்துவது என்பதில் குழம்பிய மணி, படம் எடுக்கிற திட்டடத்தையே கைவிட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
கொடுத்த தேதிகள் அப்படியே இருக்கு. படத்தை ஆரம்பிங்க. பார்த்துக்கலாம் என்று இப்பவும் நம்பிக்கையோடு அவரை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்களாம் இன்னும் சிலர். யார் பேச்சை கேட்கப் போகிறாரோ அவர்?
இலியானாவின் அலட்சியம்
பெரிய நடிகை ஆகிவிட்ட பின் என்ன செய்துவிட முடியும் நம்மை என்ற மனப்போக்கு வந்துவிடுகிறது சில நடிகைகளுக்கு. அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது இலியானா. தமிழில் பல முறை அவரை நடிக்க அழைத்த போதும் ஏதேதோ காரணங்களால் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் அவர்.
இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விக்ரமுடன் நடிக்க இவருக்கு 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் ஒன்றிரண்டு நாட்கள் ஷ§ட்டிங் போன பின் டைரக்டரையே மாற்றிவிட்டார் விக்ரம். இப்படி விக்ரம் மாற்றிய டைரக்டர்களே இருவருக்கும் மேல். கடைசியாகதான் தெய்வ திருமகன் எடுப்பதாக முடிவானது.
கொடுத்த தேதிகளில் படம் எடுக்க முடியாமல் போனதான் தெய்வதிருமகனில் நடிக்க முடியாது என்று ஒதுங்கிக் கொண்டார் இலியானா. இப்போது கொடுத்த அட்வான்சை கேட்டால் பதிலே சொல்ல மறுக்கிறாராம். போனையும் எடுப்பதில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் மோகன் நடராஜன். நண்பன் படத்தில் நடிக்கும் இலியானாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியிலிருந்து 35 ஐ கறந்துவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம்.
விறகுக்கட்டை அடி
செங்காத்து பூமியில் படத்தின் டைரக்டர் ரத்னகுமார் தனக்கு கீழே வேலை செய்யும் உதவி இயக்குனர்களை கொத்தடிமையை விடவும் கொடுமையாக நடத்துவதாக செய்தி பரவியிருக்கிறது. படப்பிடிப்பில் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்களாம் அவர்கள்.
எல்லா டைரக்டர்களும் கெடுபிடியாகதான் இருப்பார்கள். பண விஷயத்தில் இரக்கம் காட்ட மாட்டார்கள். நள்ளிரவு வரை நாயாய் உழைத்தாலும் சாப்பிட்டியா என்று ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார்கள். இந்த பிரச்சனை எல்லாம் பெரிய விஷயம் இல்லை.
ஆனால் ஏதாவது தப்பு செய்தால் விறகு கட்டையை எடுத்து அடிக்கிறாராம். இது பொறுக்க முடியாத உதவி இயக்குனர்கள் தனித்தனியாக கூடி கண்ணீர் வடிக்கிறார்களாம். இயக்குனர்கள் சங்கமாவது இதில் தலையிட்டால் தேவலாம் என்று மனசுக்குள் அழுகிறார்களாம். வெளியே சொன்னால்தானே விஷயம் தெரியும்?
0 comments:
Post a Comment